சைபர் காவலன் பற்றி அறிக

www.cyberkavalan.info


இந்த தளத்தில் புதுபிக்கப் பட்டவை

கடைசியாக புதுபிக்கப் பட்ட நாள் : 24.06.2018 | 06.53 மணி

  • யூ டியூபில் காணொளி பதிவிடப் பட்டுள்ளது
  • யூ டியூப் சேனல் பிரசுரிக்கப் பட்டது
  • அறிக பக்கம் சேர்க்கப் பட்டுள்ளது
  • சைபர் காவலன் ஆங்கில தலைப்பு தமிழில் மாற்றப் பட்டுள்ளது
  • தளத்தின் Footer டிசைன் மாற்றப் பட்டுள்ளது
  • கோடிங்கில் இருந்த குறைகள் சரி செய்யப் பட்டுள்ளது

சைபர் செக்யூரிட்டி என்றால் என்ன ?

சைபர் செக்யூரிட்டி என்பது இணைய திருட்டை தடுக்கும் ஒரு வேலையாகும். உதாரணமாக திருடர்கள் இருக்கிறார்களே அவர்களை தடுக்க காவல் துறை இருப்பது போல, ஹேக்கர்களை / ஹேக்கிங் தடுக்க பயன்படுவது சைபர் செக்யூரிட்டி ஆகும். அதாவது இன்டெர்னட் போலீஸ் ஆகும். இந்த போலீசை எந்த அரசாங்கமும் நியமிக்கது. மருத்துவர், பொறியாளர், வடிவமைப்பாளர் போல இதுவும் ஒரு வேலையாகும். இன்றைய தொழில் நுட்ப உலகில் தொழில் முறை போட்டிக்காகவும், தனிப் பட்ட பகைக்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கிலும், இணைய திருட்டு நிகழ்கிறது, இந்த இணைய திருட்டு மூலம் ஒருவரின் தொழில் முடக்கப் படலம், ஒருவரின் அந்தரங்க விஷயங்கள் வெளிப் படுத்தப் படலம், அல்லது மேலும் பல அசம்பாவிதங்கள் நிகழக் கூடும். மட்டுமல்லாது பல்வேறு சமூக விரத / சட்ட விரோத செயல்களும் நடக்கிறது. இவ்வாறான சம்பவம் நடந்து விட்டால் மீள்வதென்பது குதிரைக்கு கொம்பாகும். அவ்வாறான பிரச்சனைகள் நடக்கும் முன்பே தடுக்க பயன் படுவதும், நடந்து விட்டால் அவற்றிலிருந்து மீள பயன்படுவதும் சைபர் செக்யூரிட்டி ஆகும். நீங்கள் எங்காவது வெளியூருக்கு செல்லும் போது திருடர்கள் நுழையாமல் இருக்கு வீட்டை பூட்டி செல்வது போல, உங்களது தொழில் நுட்ப சமாச்சாரங்கள் திருட்டு போகாமல் பாதுகாப்பதாகும். கைபேசி, கணினி, ஆன்லைன் கணக்குகள், இணையதளம், ஈமெயில், சமுக வலைத்தளம், என எல்லா இடத்திலும் சைபர் செக்யுரிட்டியின் சேவை மிகவும் தேவையாகும். மட்டுமல்லாது தவிர்க்க முடியாததுமாகும்.

வாசகர்கள் கருத்து சொல்ல முடியுமா ?

தாராளமாக. உங்களது கருத்து மற்றும் விமர்சனங்களை கீழ்கண்ட முகவரியில் அனுப்பலாம்.
[email protected]

சைபர் காவலன் தளம் முழுமை அடைந்து விட்டதா ?

நிச்சயமாக இல்லை. இது புதிதாக தொடங்கப் பட்ட இணையத்தளமாகும். இந்த தளம் கிட்டத் தட்ட 60% முழுமை அடைந்து விட்டது. எனினும் எங்களது நோக்கம் மிக பெரியது ஆகும். ஆகையால் இந்த தளத்தின் மேம்பாடு என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இதில் மேலும் சில மேம்பாடுகள் நிகழ்த்தப் படும்.

சைபர் காவலன் ஏன் ?

சைபர் செக்யூரிட்டி இந்த தலைப்பில் நூறு பக்க கட்டுரை கூட எழுத முடியும் எனினும், நமது சைபர் காவலன் இணையதளம் தொழில் நுட்ப மனிதர்களுக்கானது அல்ல . இது சாதாரண மனிதர்களுக்கானது தொழில் நுட்ப மனிதர்கள் எங்கும் கற்க முடியும் மட்டுமல்லாது இந்த தளத்தில் இருப்பதை விட அதிகம் அறிந்து வைத்திருக்க கூடும். தொழில் நுட்ப அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் இன்றைய தொழில் நுட்பங்களையும் அதனை கையாளும் விதமும், ஆனால் சாதாரண மக்களுக்கு அவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்பதால் சைபர் காவலன் சிறிய முயற்சி எடுத்துள்ளது. எங்களது முழு கவனமும் மக்களை தொழில் நுட்ப சிக்கலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கற்றுக் கொடுப்பதிலேயே இருக்கும். இன்றைய காலத்தில் இணைய திருட்டு என்பது மிக சாதாரணமாக நடக்கிறது, இணைய திருட்டு மட்டுமல்லாது தொழில் நுட்பங்களை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவறுதலாக பயன் படுத்தி மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அது போன்ற ஆபத்திலிருந்து தங்களை சரிவர பாத்து காக்க இந்த தளமானது 100% விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை உறுதியளிக்கிறோம்.

சைபர் காவலன் இனைய தளம் வாசகர்களின் வரவை ட்ராக்கிங் செய்கிறதா ?

ஆம் வாசகர்களின் வரவை சைபர் காவலன் தளம் டிராக்கிங் செய்கிறது. இதில் எந்த விதமான உள் நோக்கமும் இல்லை. இந்த டிராக்கிங் வாசகர்களின் வரவை அறிந்து கொள்ளவும், எங்களது தள மேம்பாட்டிற்காவும் பயன் படுகிறது. டிராக்கிங் சிஸ்டம் கொண்டு சைபர் காவலனால் எந்த ஆபத்தும் நிகழாது என்பதனையும், வேறு எந்த விஷயங்கக்காகவும் வாசகர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்து பயன்படுத்தப் படாது என்பதையும் உறுதியளிக்கிறோம்.

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja