Cyber Security Guidence Website in Tamil

அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யும் முன் இதை கவனிக்கவும்

பதிவிட்ட தேதி: 2018-06-14/ App Permission

App Permission Giving எப்றால் நாம் நம்முடைய கைபேசியில் ஒரு அப்லிகேசனை இன்ஸ்டால் செய்யும் போது அது குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்கும். சில அப்லிகேசன் எந்த கேள்வியும் கேட்காமல் தனக்கு தேவையானதை நம்முடைய அனுமதி இன்றி எடுத்துக் கொள்ளும்.

இவ்வாறு எடுத்துக் கொண்டால் நம்முடைய தகவல்கள் திருடப் பட வாய்ப்புகள் அதிகம்.

ஒரு சாதரண அப்லிகேசன் இன்ஸ்டால் செய்யும் போது ஒரு விண்டே வரும் அதில் நம்முடைய கேலிரியில் நான் எனக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம என்று கேட்கும், நாம் அனுமதி கொடுத்தால் அது மறு முறை எந்த கேள்வியும் இன்றி நம்முடைய தகவல்களை எடுத்துக் கொள்ளும்.

போட்டோ எடிட்டிங் / வீடியோ எடிட்டிங்க் தொடர்பான அப்லிகேசன் இன்ஸ்டால் செய்தால் அந்த அப்லிகேசன் கேலரியில் அக்ஸ்ஸ கேட்கும்.

கால் ரெக்காடிங் அப்லிகேசன் நமக்கு வரும் கால்ஸ், காண்டால்ட்ஸ் போன்றவற்றின் அனுமதி கேட்கும்.

நீங்கள் ஒரு கேம் இன்ஸ்டால் செய்யும் போது அதற்க்கு எந்த அக்ஸஸும் தேவை இல்லை. அந்த கேமிர்க்கு நம்முடைய கேலரியில் என்ன வேலை இருக்க முடியும் ? இது போல அதற்க்கு தொடர்பே இல்லாத பல விசயங்களில் அந்த கேம் அக்ஸஸ் கேட்க்கும். நூறு சதவிகிதம் அந்த கேமினால் நம்முடைய தகவல் திருடு போகும் என்று சொல்ல முடியாது எனினும் நம்முடைய தரவுகளின் பாதுகாப்பிற்க்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

ஒரு வேலை அந்த கேம் ஒரு ஹேக்கரால் உருவக்கப் பட்டிருந்தாலும் சந்தேகப் படுவதிற்க்கில்லை.  

சரி எப்படி ஒரு அப்லிகேசனிற்க்கு App Permission கொடுப்பது என்பதை பார்ப்போம்:

ஒரு அப்லிகேசன் நீங்கள் இன்ஸ்டால் செய்கிறீர்க்ள் என்றால் இன்ஸ்டாலேசன் முடிந்ததும் அந்த அப்லிகேசனை நீங்கள் திறப்பீர்கள் அவ்வாறு திறந்த உடன்  அந்த அப்லிகேசன் சில கேள்விகளை உங்களிடம் கேட்க்கும் முதலில் அந்த கேள்விகள் என்ன என்பதை நிதானமாக படியுங்கள், அந்த அப்லிகேசன் எது எதுக்கெல்லாம் Access கேட்கிறது என்று பாருங்கள். அந்த அப்லிகேசனிற்க்கும் அது அனுமதி கேட்ட விசயத்திற்கும் சம்பந்தம் இருந்தால் கொடுக்கவும் இல்லையேல் விட்டு விடவும்.

சில அப்லிகெசன்கள் எந்த அனுமதியும் கேட்காமல் அது தானாகவே அனுமதியை எடுத்துக் கொள்ளும். அவற்றையும் நாம் சரி பார்ர்க்க முடியும்

அவைகளை சரி பார்க்க கீழே கொடுக்கப் பட்டுள்ள இடத்திற்க்கு செல்லவும்.

Settings -> Apps -> ஒரு அப்லிகேசனை கிலிக் செய்யவும் -> Permissions

இந்த பர்மிசன் எனகிற ஆப்சனில்தான் அந்த குறிப்பிட்ட அப்லிகேசன் எது எதெற்க்கெல்லாம் அக்ஸஸ் பெற்றுள்ளது என்பது தெரியும். அந்த அப்லிகேசனிற்க்கும் பெற்றுள்ள ஆக்ஸ்ஸக்கும் தொடர்பு இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லையேல் நீங்கள் அக்ஸஸை நிறுத்தவும்.

சில சமயம் ஏதேனும் ஆக்ஸஸை நீங்கள் நிறுத்தி விட்டால் அந்த அப்லிகேசனை திறக்கும் போது வேலை செய்யாது, அந்த அப்லீகெசன் மீண்டும் அக்ஸ்ஸ கேட்டால் நீங்கள் கொடுக்கலாம், அந்த அப்லிகேசன் தேவை என்றால் மட்டும்.

எதற்காக அப் பர்மிஸன் ?
அப் பர்மிசன் பல காரணிகளுக்காக கேட்கப் படலாம், குறிப்பாக சொல்ல போனால் நீங்கள் ஒரு கால் ரெக்கடி அப்லிகேசன் இன்ஸ்டால் செய்கிறீர்கள் போன் கால்ஸ் நமக்கானது இரகசியமானதாக கூட இருக்கலாம். ஆனால்.அந்த கால் ரெக்காடிங் அப்லிகேசனின் வேலை வரும் போன் கால்களை ரெல்காட் செய்வது, அதனால்தான் கால் ரெக்காடிங் அப்லிகேசன் போன் கால் அக்ஸஸ் கேட்கிறது.

மேலும் தெளிவாக காண Cyber Kavalan யூடிப் சேனலில் பதிவிட்டுள்ள காணெளியை  பார்க்கவும்.

கானெளிக்கான லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பான கேள்விகள் ஏதேனும் இருந்தால் அந்த வீடியோவின் காமெண்டில் கேட்கவும்.


Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja