Cyber Security Guidence Website in Tamil

வாட்ஸ் அப் விட மிக சிறந்த மெசேஞ்சர் டெலிகிராம் பற்றி அறிவோம் ! ( Telegram Private Messenger in tamil)

பதிவிட்ட தேதி: 2018-08-08/ Telegram Private Messenger

வாட்ஸ் அப் ( வாட்ஸாப்ப்)  வணிக மயமாக்கப் பட்டதையும், அதில் இனி வரும் சவுகரிய குறைவான அப்டேட்கள் பற்றியும் படித்திருப்போம்.

ஒரு வேளை வாட்சப்பிலிருந்து நாம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ, அல்லது வாட்சப் வணிகமயமாக்கப் பட்டாலோ நாம் மாறுவது நலம் பயக்கும்.

ஆக, வாட்சப்பிற்க்கு மாற்றாக "டெலிகிராம் பிரைவேட் மெசெஞ்ர்" இதனை சைபர் காவலன் பரிந்துரை செய்கிறது.
சைபர் காவலன் பரிந்துரை செய்வதால் பணம் வாங்கிக் கொண்டு விளம்பரம் செய்கிறோம் என நினக்க்க வேண்டாம். ஏனென்றால் சைபர் காவலன் இது வரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கலை. :p ஏற்கனவே சிறந்த 5 பிரைவேட் மெசெஞ்சர்கள் என்ற தலைப்பில் நாம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம். படிக்க இப்பதிவின் முடிவில் கொடுக்கப் பட்டுள்ள லிங்க் பயண்படுத்தவும்.

டெலிகிராமிற்க்கு மாற வேண்டியதன் கட்டாயம்:

இனி வரும் காலங்களில் வாட்சப் கட்டணம் வசூலிக்கலாம் மற்றும் வாட்சப்பில் வியாபார நோக்கிலான விளம்பரங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.  ஒரு வேளை இவை உண்மையானால் நம்முடைய பிரைவசி வாழ்கைக்கான சாட்டிங்கிற்க்கு வாட்சப் மெசெஞ்சர் லாயிக்கு படாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளவும்.

வாட்சப் விளம்பரம் பற்றிய விரிவான கட்டுரை படிக்க பதிவின் முடிவில் கொடுக்கப் பட்டுள்ள லிங்க் பயண்படுத்தவும்.
மட்டுமல்லாது வாட்சப் கட்டணம் வசூலித்தால் அது எல்லோருக்கும் எளிதாக இருக்க முடியாது. குறிப்பாக வீட்டிலிருக்கு தாய்மார்களுக்கும்,நடுத்தர குடும்பத்தினருக்கும்.

டெலிகிராம் பிரைவேட் மெசெஞ்சரானது முற்றிலும் இலவசமாகும். வாட்சப் விட அதிக ஃபியூச்சர்க்ள் கொண்டுள்ளது. வேகத்திலும் வாட்சப்பை விட நன்றாகவே உள்ளது.

டெலிகிராம் மெசெஞ்சரின் சில ஃபியூசர்களை இங்கே பார்கலாம்:

1. டெலிகிராம் மெசெஞ்சர் மிக வலிமையான என்கிர்ப்சன் அதாவது பாதுகாப்பு வளையம் கொண்டுள்ளது. வேறு எவராலும் நீங்கள் செய்யும் சாட்டிங்கை பார்க்க முடியாது.

2.வாட்சப்பில் நீங்கள் அதிக பட்சமாக 16mb வீடியோ மட்டுமே அனுப்ப முடியும்.
ஆனால் டெலிகிராமில் எல்லா வகையான கோப்புகளையும் அனுப்ப முடியும்.
மட்டுமல்லாது எந்த அளவீடும் கிடையாது.

3. Self District எனும் ஆப்சன் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு நேரம் செட் செய்தால் போதும். நீங்கள் மெசேஜ் படித்து முடிந்ததும் நீங்கள் செட் செய்த நேரத்தில் அந்த மெசேஜ் அழிந்து விடும்.

4. டெலிகிராம் ஒரு கிராஸ் ப்லாட்ஃபார்ம் ( Cross Platform)  ஆகும். கிராஸ் ப்ளாட் ஃபார்ம் என்றால் நீங்கள் உங்கள் டெலிகிராம் அக்கவுண்டை கணிணி, டேப்லெட் மற்றும் கைபேசி என எல்லாவறிலும் பயண் படுத்த முடியும்.

5. டெலிகிராம் மற்ற மெசெஞ்சர்களைவிட நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை மிக வேகமாக மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும்.

6. நாம் அனுப்பும் செய்திகாள் வேகமாகவும், மிக பாதுகாப்பாகவும் சென்றடைய, டெலிக்ராம் நிறுவணத்தின் சர்வர் (Server) உலகம் முழுக்க பரவிக் கிடக்கிறது.

7. டெலிகிராம் ஒரு ஒபன் சோர்ஸ் (Open Source) ஆகும். ஒபன் சோர்ஸ் என்றால் யார்வேண்டுமானாலும் டெலிகிராமின் கட்டமைப்பு குறீயீடுகளை ( Core of Coding ) மாற்றி அமைக்க முடியும். ( இதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்ல).

8. டெலிகிராம் எப்பொழுதுமே நமக்கு இலவசமாக கிடைக்கும். இதில் விளம்பரங்கள் இடம் பெறாது, டெலிகிராகிற்க்கு எந்த விதமான சந்தா கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

9. டெலிகிராம் உங்கள் தகவல்களை மற்றும் சாட்டிங்களை இணைய திருடர்களிடமிருந்து (Hackers) பாதுகாக்கிறது.

10.  டெலிகிராம் தனது பயணளர்களுக்கு இலவசமாக 1.5 ஜிபி கிளவுட்
ஸ்டோரேஜ்(Cloud Storage) வழங்குகின்றது. உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர கோப்புகளை டெலிகிராமினுள் பதிவேற்றம் செய்துவிட்டு, தேவைப்படும் போது தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ முடியும்.

ஒரு வேலை வாட்ஸாப்பில் புதிய மாற்றங்கள் வாடிக்கையாளர்களாகிய உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால் கண்களை மூடிக் கொண்டு டெலிகிராமுக்கு தாவிக் குதியுங்கள்.

டெலிகிராம் பயன்படுத்த வாட்ஸாப்ப்பை விட மிக எளிது.

பி.கு: மிக இரகசியமான / பர்சனல் சாட் செய்யவோ அல்லது புகைப்படம் அனுப்ப மறக்காமல் டெலிகிராமில் இருக்கும் சீக்ரெட் சாட் (Secret Chat) எனும் ஆப்ஷனை பயன் படுத்தவும்.


Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja