ஆன்றாயிடு போனை என்கிரிப்ட் செய்வது எப்படி ?

பதிவிட்ட தேதி: 2018-06-14/ Encryption

ஆன்றாயிடு போனை என்கிரிப்ட் செய்வது எப்படி ?

முதலில் என்கிரப்சன் என்றால் என்ன என்பதை பாப்போம்:

என்கிராப்ட்டின் என்பது நேரடியான ஒரு விஷயத்தை மறைமுகமாக சொல்வதாகும். உதாரணமாக நமது ஊர் கடைகளில் பொருட்களின் மீது விலைக்கு பதிலாக மூன்று ஆங்கில எழுத்துக்கள் எழுதி இருப்பார்கள். அது ஏனென்றால் வாடிக்கையாளருக்கு அதன் உண்மை விலை தெரிய கூடாது என்பதற்காக. அந்த ஆங்கில குறியீட்டின் அர்த்தம் அதை எழுதியவருக்கும் அங்கு வேலை பார்ப்பவருக்கு மட்டுமே புரியும்.


என்கிரிப்ஷன் என்பது இன்று நேற்று அல்ல பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்துள்ளது. நம்முடைய முன்னோர்கள் உருவ வடிவிலும் என்கிரிப்ஷனை பயன் படுத்தி உள்ளார்கள்.

மேலே குறிப்பிட்ட என்கிரிப் சனுக்கும் மென்பொருட்களின் என்கிரிப்ஷனுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவற்றை பின் வரும் பிற தலைப்புகளில் பார்க்கலாம். இப்போது ஆன்றையடு போனின் என்கிரிப்ஷன் பற்றி பாப்போம்


ஏன் என்கிரிப்ட் செய்ய வேண்டும் ?

1.  தகவல் திருட்டுகளை தடுக்க.

2.  நம்முடைய புகைப்படங்களை / இன்ன பிற கோப்புகளை பாதுகாக்க.

3. என்கிரிப்ட் செய்வதால் நாம் அழித்த கோப்புகளை பிறர் ரெகவரி செய்ய முடியாது.

4. நம்முடைய தகவல்களை ஹேக்கர்கள் கண்காணிக்க  முடியாது.

5. என்கிரிப்ட் செய்வதால் கைபேசியின் வேகத்தில் எந்த குறைவும் ஏற்படாது.

6. என்கிரிப்ட் செய்வது எளிது.என்கிரிப்ட் செய்யும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. என்கிரிப்ட் செய்ய உங்களது கைபேசியில் குறைந்த பட்சம் 80% பேட்டரி சார்ஜ் இருக்க வேண்டும்.

2.என்கிரிப்ஷன் நடந்து முடிய 10-15 நிமிடங்கள் ஆகலாம்.

3.என்கிரிப்ஷன் நடக்கும் பொது ஒரு போதும் கைபேசியை அணைக்கவோ , பேட்டரியை பிடுங்கவோ வேண்டாம்.

4. உங்களது கைபேசியை ஒரு முறை என்கிரிப்ட் செய்தால் பொதும். மறுமுறை நீங்கள் கைபேசியை ரீசெட் செய்யும் வரை அவை என்கிரிப்ட் செய்ய பட்டு இருக்கும்.

5. உங்கள் கைபேசியை ஆன் செய்யும் சில நொடிகள் இயக்கத்தில் தொய்வு இருக்கும். நமக்கு மிக பெரிய பாதுகாப்பு கிடைக்கும் போது அது தவறில்லை.

6.என்கிரிப்ட் செய்து விட்டோம் என்று உங்களது எல்லைகளை மீறி அந்தரங்க விஷயங்களை சேமித்து வைப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும் .

7.உங்களது கைபேசியை நீங்கள் பயன் படுத்தாத நேரத்தில் போன் லாக் ஆகி இருக்கும் , அப்போது உங்களது கைபேசியில் என்கிரிப்ஷன் வேலை செய்து கொண்டு இருக்கும். யாராவது ஹேக்கர் உங்கள் கைபேசியை சீண்ட நினைத்தால், அங்கு உள்ள கோடிங் அவர்களை குழப்பி விடும்.


என்கிரிப்ட் செய்யும் முறை:

தெளிவாக மேலே புகை படத்தில் கொடுக்க பட்டுள்ளது.


எழுத்து வடிவிலும் இங்கே கொடுக்க படுகிறது:

Step 1 : Settings

Step 2: Security

Step 3: Encryption

Step 4: Encrypt


உங்களது பாஸ் கோட் கேட்டால் கொடுக்கவும். பிறகு சில முறை உங்கள் கைபேசி ரீ ஸ்டார்ட் ஆகும்.

எல்லாம் முடிந்த பிறகு. செட்டிங்சில் வந்தே அதே என்கிரிப்ஷனை பார்க்கவும். என்க்ரிப்ஷன் வெற்றிகரமாக முடிந்து இருந்தால்.

“Encrypted ” என்று இருக்கும்.

"போனுக்கு என்கிரிப்ஷன் இருப்பது போல நம் நாட்டு பெண்ணுக்கு இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்."


Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja