சிறந்த 5 பிரைவேட் மெஸெஞ்சர்கள்

பதிவிட்ட தேதி: 2018-06-14/ Private Messenger

கோடிக்கணக்கன மக்கள் இன்று சாட் செய்ய தொடங்கிவிட்டார்கள். நூற்றுக் கணக்கான சாட் மெசெஞ்சர்கள் ஒவ்வொரு நாளும் பிறக்கின்றன. எனினும் மெசெஞ்சர்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு மக்களுக்கு அவசியமாகும்.


நாம் அன்றாட வாழ்வில் மிகவும் பர்ஸ்னலான விசயங்கள் தொட்டு நண்பர்களோட அரட்டை அடிக்கும் வரை இன்று மெசெஞ்சர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.


உங்காளுக்கு மெசெஞ்சர் பிடிக்க வில்லை எனில் என்னால் பயண் படுத்த முடியாது என்று கூட சொல்ல முடியாது. நீங்கள் பயண் படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாதத்திற்குள் தினிக்கப் படுவீர்கள். அது உங்கள் குடும்பத்தார்கள் மூலமாக இருக்கலாம் அல்லது அலுவலுகத்தால் இருக்கலாம்.


மெசெஞ்சர்கள் பல உண்டு அதில் நமக்கு எது பாதுகாப்பானது, அதில் அப்படி என்ன பாது காப்பு உள்ளது என்று சார்ட் அண்ட் ஸ்வீட்டாக பார்கலாம்.


காண்க: இங்கு வரிசையிடப் பட்டுள்ளது புரிதலுக்காக மட்டுமே. முதலில் இருப்பதால் அது சிறந்தது, கடைசியில் இருப்பதால் அது மோசம் என்று இல்லை.


1.சிக்னல் பிரைவேட் மெசெஞ்சர் (Signal)

இது மிகவும் பாதுகாப்பன ஒன்று என்று "எட்வின் ஸ்னோடன்" என்கிற ஹேக்கிங் வல்லுனரால் பரிந்துரைக்கப்படுறது.


உங்களது தகவல்களை மற்றும் புகைப்படங்களை மிகவும் பாதுகாப்பாக பகிற அதி நவீன

end - to - end Encryption கொண்டுள்ளது.


சிக்னல் மெசென்சர் முற்றிலும் இலவசமாகும் மட்டுமல்லாது பயண் படுத்த மிகவும் எளிது.


இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒன்று இது ஒப்பன் சோர்ஸ் ஆகும். இது ஒப்பன் சோர்ஸ் என்பதால்  இதில் இருக்கும் குறைகளை யார் வேண்டுமானலும் மாற்றி அமைக்கலாம். மென்பொருள் துறையின் வல்லுனராக இருந்தால் மட்டும்.


சிக்னல் மெசெஞ்சர் self-destruct என்று சொல்லக் கூடிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. self-destruct என்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் குறித்து வைத்தால் அந்த நேரத்திற்குள் வந்த மெசேஜ் அழிந்துவிடும்.  


சிக்னலில் கொடுக்கப் பட்டுள்ள self-destruct என்கிற ஆப்சனை கிலிக் செய்தால் அங்கு ஒரு நேர அமைப்பு  இருக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை நேரத்தை செட் செய்தால் போதும், 5 நொடி கொடுத்து இருந்தால் உங்களுக்கு மெசேஜ் வந்து படித்த 5 வது நொடி நீங்கள் படித்த மெசேஜ் காணமல் போய்விடும்.


IOS & Android அப் ஸ்டோர்களில் இலவசமாக கிடைக்கும்.


சிக்னல் மெசெஞ்சரை உங்களது கூகுள் குரோம் பிரவுசரிலும் பாவிக்கலாம்.2.டெலிகிராம் ப்ரைவெட் மெசெஞ்சர் ( Telegram ).

மற்றுமொரு அசத்தலான ப்ரைவெட் மெசெஞ்சர் டெலிகிராம் ஆகும். டெலிகிராம் என்றால் அழகிய தமிழில் தந்தி என்று பொருளாகும். அந்த காலத்தில் தந்தி என்றால் அவசர செய்திகள் அனுப்பவே செயல்பாட்டில் இருந்த ஒரு சேவையாகும்.


டெலிகிராமும் தந்தி போலதான் வேகமாக செயல் படும் அசத்தலான அப்லிகேசன்.


டெலிகிராம் இரண்டு வகையான சாட் முறை கொண்டுள்ளது. ஒன்று சாதாரண முறை மற்றொன்று  Secret Chat.


இந்த Secret Chat க்கு டெலிகிராம் நிறுவணம் தங்களுகென்று ஒரு பிரத்தியோக encryption முறைய கையாள்கிறது. நீங்கள் அனுப்பும் தகவல்களை வேறு யாருமே படிக்க முடியாது டெலிகிராம் நிறுவணம் கூட படிக்க முடியாது.


நீங்கள் அனுப்புகிற தகவல்களை மூன்றாவது மனிதர்கள்/ ஹேக்கர்கள் தீண்டவே முடியது என்று உறுதியளிக்கிறது இந்நிறுவனம்.


டெலிகிராம் மூலம்  ( .DOC, .MP3, .ZIP, etc.),  போன்ற கோப்புகளை அனுப்ப முடியும் டெலிகிராமில் உங்களது புகைப்படம், காணொளிகளை சேமித்து வைக்கவும் முடியும்.


டெலிகிராமும் Self-Destruct ஆப்சனை கொண்டுள்ளது.


டெலிகிராம் பயண் படுத்த மிகவும் எளிது,  உங்கள் IOS, Android மற்றும் கணினி பிரவுசரிலும் பயண்படுத்தலாம்.


டெலிகிராம் முற்றுலும் இலவசமாகும்.3.வாட்ஸ்அப் மெசெஞ்சர் (WhatsApp)

பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கும் ஒரு மெசெஞ்சர். எத்தனையோ மெசெஞ்சர்கள் இதனைவிட கூடதல் ஆப்சென்கள் கொண்டிருந்தும். மக்கள் மத்தியில் பிரபல்யமானது பாரட்டத் தக்கது.


நான் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை வாட்ஸப் பற்றி ஏனெனில் அனைவருக்கும் அறிந்த ஒரு அப்ப் ஆகும்.


வாட்சப் கூட end to end encryption முறையை கொண்டுள்ளது என்பதால்,மூன்றாவது மனிதர்கள்.நீங்கள். அனுப்பும் தகவல்களை படிக்க முடியாது.


வாட்சப் பயண் படுத்த மிக மிக எளிது. வாட்சப் IOS, Android மற்றும் உங்கள் பிரவுசரிலும் பயண் படுத்தலாம்.
4.டஸ்ட் மெசெஞ்சர் (Dust)

டஸ்ட் மெசெஞ்சர் முழுக்க முழுக்க end to end Encryption முறையை மனதில் கொண்டு உருவாக்கப் பட்ட மெசெஞ்சர் ஆகும்.


நீங்கள் பகிரும் தரவுகளுக்கு இது முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது


உங்களுக்கு வந்த தகவலை படித்ததும், அது அழிந்துவிடுமாம். நீங்கள் பகிரும் தகவல்களை அது எங்கும் சேமிப்பதில்லை. இந்த ஆப்சனிக்கு நீ செட்டிங்கில் மாற்றி அமைத்தால் போதுமானது.


டஸ்ட் பயண் படுத்தும் போது நீங்களோ அல்லது உங்களுடன் சாட் செய்பவரோ ஸ்கிரீன் சாட் எடுத்தால் காட்டி உங்களுக்கு தகவல் வந்துவிடும்.மட்டுமல்லாது இதில் ஸ்கிரீன் சாட் எடுப்பது எளிதல்ல.


மொத்தமாக சொல்லப் போனால் டஸ்ட் ஒரு சமூக வளைதள அப்ப் ஆகும். இதன் மூலமாக நீங்க சாட் செய்யலாம்,.ஸ்டிக்கர், லிங்க்,.மீடியா போன்றவற்றை எளிதில் பகிரலாம் மற்றும் நீங்கள் நினைக்கும் நபரை பின் பற்றலாம்.


டஸ்ட் ஒரு இலவச அப்ப் ஆகும்.5.விக்கர்  பிரைவேட் மெசெஞ்சர் ( Wikr)

மற்றொரு அட்டகாசமான என்கிரிப்டட் பிரைவேட் மெசெஞ்சர் விக்கர் ஆகும். Android மற்றும் IOS க்காக பிரத்யோகமாக உருவாக்கப் பட்டுள்ள ஆப் ஆகும்.


நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுஞ் செய்தியும் என்கிரிப்ட் செய்யப் பட்டு அனுப்பப் படுகிறது. அத்துடன் Self-Distract ஆப்சனும் கொண்டுள்ளது.


ஆகையால் நீங்கள் போட்டோஸ், வீடியோஸ், இன்னும் பல சமாச்சாரங்களை பகிறலாம் மேலும் எளிமையாக.


Shredder எனும் புதிய ஆப்சனை விக்கர் அறிமுகம் செய்துள்ளது. இதைக் கொண்டு உங்களுடைய குறுஞ்செய்தி, போட்டோ, வீடியோ அனைத்தையும் அழிக்கலாம் ஒரே நேரத்தில் அவசியம் என்றால் மட்டும். மேலும் Expiration Date என்ற ஆப்சனும் கொண்டுள்ளதால் உங்கள் கோப்புகளை அழிப்பதற்க்கு நேரம் காலம் கூட குறிக்கலாம்.


விக்கர் பயண் படுத்த ரெஜிஸ்டர் செய்யும் போது கைபேசி எண், மின்னஞ்சல்,  தேவை இல்லை மட்டுமல்லாது நீங்கள் கம்யூனிகேட் செய்யும் Metadata வை விக்கர் ஒருபோதும் சேமிப்பதில்லை.


விக்கர் முற்றிலும் இலவசமாகு, எந்த விளம்பரங்களும் விக்கரில் இடம் பெறாது என்பது குறிப்பிடத் தக்கது.Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja