சர்வீஸ் செண்டர்களில் பறிபோகும் நமது பர்சனல் போட்டோக்கள் மற்றும் டேட்டாக்கள் !

பதிவிட்ட தேதி: 2018-06-17/ Service Centers

சர்வீஸ் செண்டர்களை குற்றம் சாட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் இல்ல. எனினும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம்  கடமையாகும்


நீங்கள் மொபைல் அல்லது கணினி பழுது பார்க்க கொடுக்க போறீங்களா ? அப்போ கவணமா இருங்க !  உங்களோட தரவுகள் திருடப் பட 99.99% வாய்ப்பு உள்ளது. அது ஹேங்கிங் மூலம் இருக்கலாம் அல்லது நேரடி காப்பி பேஸ்டாக இருக்கலாம்.

என்னதான் நீங்கள் ஸ்கீரீன் லாக், பேஸ் லாக், பின்கர் பிரிண்ட் போட்டு வைத்தாலும் பழுது நிலையத்திலிருப்பவருக்கு மிகவும் எளிது. ஒரு வேளை நீங்கள் பழுது பார்க கொடுத்து அப்போ திருடப் பட வாய்பு இல்லை என்றாலும் அடுத்த சில நாட்களில் உங்கள் அந்தரங்கம் திருடப் பட வாய்ப்புகள் உள்ளது. இந்த கட்டுரையின் நோக்கம் உங்களை பயமுறுத்துவது இல்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே.

ஒரு சர்வீஸ் செண்டரில் உங்களது கைபேசியை / கணினியை எல்லாமே செய்ய முடியும். ஒரு வேளை நீங்கள் பர்ஸ்னல் விசயங்களை அழித்து விட்டு கொடுத்தாலும் அவரால் மிக எளிதாக திருட முடியும். எந்த பாஸ்வேட், பிங்கர் பிரிண்ட் இல்லாமலேயே. ஏன் பேட்டரி இல்லாமல் கூட. சரி அப்போ சர்வீசே கொடுக்க கூடாது என்று சொல்ல வில்லை. கொடுத்தால் ஆபத்து நிச்சயம் என்கிறேன்.

இன்று எத்தனையே ஸ்பை ஆப்கள் குவிந்து கிடக்கின்றன. நீங்கள் சர்வீஸ் கொடுக்கும் போது அவர் ஒரு ஸ்பை ஆப் இன்ஸ்டால் செய்தால் போதும். அது எங்கு இன்ஸ்டால் செய்யப் பட்டுள்ளது என்று கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது. அவர் ஸ்பை அப் இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் கூட உங்களது IP Address மட்டும் அவர் தெரிந்து கொண்டால் போதும். அவர் நினக்கிற போது உங்கள் போனிர்க்குள் / கணினிக்குள் வந்து செல்ல முடியும். உங்கள் அனுமதி இல்லாமலேயே / உங்களுக்கு தெரியாமலேயே உங்களது கேமிராவை ஆன் செய்து உங்களை கண்கானிக்க முடியும். கேமிரா இயங்குவது கூட உங்களுக்குத் தெரியாது.


உங்கள் வங்கி கணக்க திறந்து பணத்தை கொள்ளை அடிக்க முடியும். நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் போனில் பேசும் உறையாடல்களை ஒட்டு கேட்க முடியும்.


நீங்கள் சர்வீஸ் செண்டர் போக வேண்டாம் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அங்கு இருக்கும் ஆபத்துகளை உணர்வது மிகவும் அவசியமாகும்.


தற்பாதுகாப்பு முறைகள்:

ஒரு வேலை சர்வீஸ் செண்டரிலிருந்து உங்கள் கைபேசி கிடைத்தால் அதை முழுவதும் பேக்டரி  ரீ செட் செய்யவும். கணினி என்றால் புதிய ஓ.எஸ் போடவும்.


சர்வீஸ் கொடுக்கும் முன் உங்களது போனில் இருக்கும் பர்ஸ்னல் விசயங்கள் அனைத்தையுமே அழித்து விட்டு கொடுக்கவும். அழிக்கும் முன்பு ஒரு மெமரி கார்டில் /ஹார்டிஸ்கில் பேக்கப் எடுக்க மறக்க வேண்டாம்.


டிஸ்ப்லே பழுதான போன் என்றால், அதில் பர்ஸ்னல் விசயங்கள் இருக்கிறது என்றால் மிக கவணம்.


சர்வீஸ் கொடுக்கும் முன்பு மூன்று முறை பேக்டரி ரீசெட் செய்து கொடுங்கள்.


கணினி பயணாளர் என்றால் உங்களது மிக பரானலான விசயங்களை ஒரு போதும் கணிணியில் சேமிக்க வேண்டாம்.  ஒரு என்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் வைத்து அதில் சேமிக்கவும்.


மெமரி கார்டு, ஹார்டிஸ்க், செல்போன், கணிணி, இன்ன பிற டிவைஸ்களில் நீங்கள் அழித்த கோப்புகளை மீண்டும் கொண்டு வர முடியும் என்பதை நினைவில் கொள்க.


சர்வீஸ் கொடுக்கும் போது பிங்கர் லாக், பாஸ் கோட் லாக் போட்டு கொடுக்கவும். அதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.


கொடுத்து விட்டு வீடு திரும்பும் போது மெமரி கார்டு, சிம், பேட்டரி வாங்க மறக்க வேண்டாம்.


பின் குறிப்பு :

உங்கள் போனில் பர்ஸ்னல் விசயங்கள் எதுவும் இல்லை என்றால் கவலைப் பட தேவை இல்லை. தாரளமாக சர்வீஸ் கொடுக்கலாம். இல்லை என்றால் எப்போதுமே  வைத்து இருந்திருக்கக் கூடாது.குறிப்பாக அந்தரங்க விசயங்கள் முன்னெரு காலத்தில் வைத்து இருந்து அதை அழித்து இருந்தாலும் சர்வீஸ் கொடுப்பதை தவிற்பது சிறப்பு.


மேல் குறிப்பிட்ட அனைத்தும், சர்வீஸ் கொடுக்க்கும் போது மட்டுமில்லை செல் போனை விற்க்கும் நபருக்கும் பொருந்தும்.


சர்வீஸ் கொடுப்பது ஆபத்து என்று கருதினால் உங்களது கைபேசியை நீரினுள் 1/2 மணி நேரம் முக்கி எடுத்துவிட்டு, வெயிலில் காய வைத்து பின் தீயிட்டுக் கொழுத்தவும்.

ஏனெறால் உடைந்த பாகங்களில் இருந்து கூட அழித்த போட்டோக்களை மீண்டும் எடுக்க முடியும்.


அடுத்த முறை புதிய போன் வாங்கும் போது நாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்க.


Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja