WEP, WPA, WPA2 என்றால் என்ன

பதிவிட்ட தேதி: 2018-07-01/ Wifi Security

வைஃபை - இன்றைத தொழில் நுட்ப உலகின் தவிற்க்க முடியாத ஜாம்பவான்.

இன்றைய தொழில் நுட்பம் நமது அன்றாட வேலைகளை மேலும் எளிதாக்கிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு விசயத்திற்க்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இக்கட்டுரையின் எழுத்தாளனாகி எனக்கும் சரி, இதனை படித்துக் கொண்டிருக்கும் வாசகராகிய உங்களுக்கும் சரி. அந்த இரண்டு பக்கமும் நல்லவையாக இருக்கலாம் அல்லது இரண்டில் ஒன்று வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த கூற்றுக்கு இன்றைய தொழில் நுட்பமோ / வைஃபையோ விதிவிலக்கு அல்ல.

நாம் அன்றாட வேலைகளில் பங்கெடுத்து நமது வேலைகளை எளிதாக்கும் ஒரு கருவியை நம்மிடம் எந்த அளவு புரிதல்கள் இருக்குமோ அந்த அளவு நாம் அந்த கருவியைக் கொண்டு பயணடையலாம். இல்லையேல் நாம் அறை குறையாக கற்றுக் கொண்டதை வைத்து காலம் தள்ள வேண்டியதுதான்.

வைஃபை என்றால் அதன் கடவுச் சொல்லும் (Password) சேர்ந்துதான் நமது நினைவுக்கு வரும். நம்மை பொருத்த வரை கடவுச் சொல் என்பது நம்முடைய வைஃபையை யாரு பயண்படுத்தி விட கூடாது அவ்வாறு பயண் படுத்தினால் நமக்கு இணைய இனைப்பின் வேகம் குறையும் / பில் எகிறிடும். அன்லிமிட்டட் சேவையாக இருந்தாலும் சும்மானாச்சிக்குமாவது நாம் சொல்லிக் கொள்வோம் பில் எகிறிடும்.

வைஃபையின் கடவுச் சொல்லை பற்றியும், அதன் வகைகள் பற்றியுமான அறிவு நமக்கு மிகவ அத்யாவசியம் ஆகும்.

வைஃபையின் கடவுச்சொல் வழிமுறைகள் WEP, WPS, WPA, WPA2 ஆகியவையாகும்.


WEP - Wired Equivalent Privacy

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பயண்பாட்டில் இருந்து வந்த ஒரு பழைமையான வழிமுறையாகும். அந்த கால கட்டதில் பயண்படுத்தப் பட்ட ரவுட்டர்களின் தாங்கும் திறன் என்று சொல்லக் கூடிய கெப்பாசிட்டிக்கு ஏற்ப்ப தயார் செய்யப் பட்டது. ஆனால் இது மிக மிக பலவீனமான கடவுச் சொல் வழிமுறையாகும். தொழில் நுட்ப முன்னேற்றம் ஆகத் தொடங்கிய போது இந்த WEP வழிமுறை கொண்டு பயன்படுத்தப் பட்ட ரவுட்டர்களிம் கடவுச் சொல்லை திருடுவது மிக எளிதாகிவிட்டது. கடவுச் சொல்லை கண்டு பிடித்துக் கொடுக்கும் மென்பொருள்களும் எளிதில் கிடைக்கத் தொடங்கியது.


மட்டுமல்லாது WEP வழிமுறை கொண்டு கடவுச் சொல் கொண்டிருந்த ரவுட்டர்களை ஹேக் செய்வது ஹேக்கர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல லாபகமாக இருந்துள்ளது. ஆகையால் ஹேக் செய்யப் பட்ட ரவுட்டர்களின் வழியே பல ஹேக்கர்கள் ஹேக் செய்யப் பட்ட ரவுட்டரில் இணையம் பயன்படுத்திய மக்களின் ப்ரைவசி / பணம் ஆகிவை சூறையாடப்பட்டன.


ஒரு ரவுட்டர் ஹேக் செய்யப் பட்டது என்றால் அந்த ரவுட்டரில் இணையம் பயண்படுத்தும் அனைவரையும் மிக துள்ளியமால கண்காணிக்க முடியும் என்பதையும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் பாதிக்கப்பட்ட மக்கள் அறிந்திருக்கவில்லை.

இன்றளவும் WEP ஆப்சன் பல ரவுட்டர்களில் கொடுக்கப் பட்டாலும், அதனை பயண்படுத்துவது என்பது 2004 ஆண்டு முடிவுக்கு வந்தது. காரணம் WEP யை விட சற்று பலமான கடவுச் சொல் வழிமுறையான WPA அறிமுகமாகியிருந்தது.


WPA - Wi-Fi Protected Access

மேலே குறிப்பிட்டது போல WEP யின் நேரடி மாற்றாக 2003 ஆம் ஆண்டு WPA கடவுச்சொல் முறை வெளியிடப் பட்டது.  WPA வெளியாகி சரியாக ஒரு ஆண்டுகள் கழித்துதான் WEP பாடையில் ஏறியது. எனினும் இன்று வரை பல ரவுட்டர்களில் WEP ஆப்சன் இருக்கதான் செய்கிறது.


பெருவாரியான WPA கடவுச் சொல்முறை WPA-PSK (Pre-Shared Key) என்கிற கட்டமைப்பை கொண்டிருக்கும். இது 256 - பிட் என்கிற என்கிரிப்சப் கொண்டுள்ளது. WEP யுடன் ஒப்பிடும் போது இது வலிமையானது ஆகும். WEP யானது 64 - பிட் மற்றும் 128 - பிட் என்கிரிப்சன் மட்டுமே தன்னகத்தே வைத்திருந்தது.


பழைய வெர்சன் ரவுட்டர்கள்  WPA என்கிரிப்சன் பயண்படுத்தும் போது ரவுட்டர் அதிக சூடு ஆக்ஜ்ம் செயல்பாடுகளில் தொய்வு இருக்கும். ஏனெனில் ஒது அட்வான்ஸ் சிஸ்டம் ஆகும். மட்டுமல்லாது WPA என்கிரிப்சன் முறையை ஹேக் செய்வது அவ்வளவு கடினமான காரியம் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.


WPA 2 - Wi-Fi Protected Access Version II

இது WPA வின் இரண்டாது பதிப்பு (Version) WPA 2 ஆகும். இதனுடைய முந்தைய பதிப்பில் இருந்த குறைகள் களையப்பட்டு, அதிக வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.


WPA வில் பயன்படுத்தப் பட்டு வந்த  TKIP அல்கோரிதமிற்க்கு மாற்றாக இதைவிட வலிமையான CCMP (Counter Cipher Mode with Block Chaining Message Authentication Code Protocol) என்கிற தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகின்றது.


தற்போது வரை அதிக பட்ச பாதுகாப்பு என்றால் அது WPA2 ஆகும். இதனை ஹேக் செய்யவே முடியாயு என்று சொல்ல முடியாது ஆனால் மிக கடினமாகும்.  இதுனுடைய கடவுச் சொல் பாதுகாப்பு முறை மிக வலிமையாகும்.


சரி முடிவுதான் என்ன ?


முடிவு: உங்களது கடவுச் சொல் WPA2 என்கிரிப்சன் வழிமுறையைக் கொண்டிருக்க வேண்டும். WEP, WPA  இவை இரண்டும்பலவீனமாக இருப்பதால் தவிற்க்கவும்.


WPS என்கிற ஆப்சனை டிசேபில் செய்ய மறக்க வேண்டாம். இது ஹேக்களுக்கு இரகசிய திறவுகோல் ஆகும். WPS எனெபிலில் இருந்தால் கடவுச் சொல் இல்லாமலேயே உங்களது வைபையுடன் கனெக்ட் செய்ய முடியும்.


வலிமையான கடவுசெல் அமைக்கும் முறை:

1. மறந்தும் WEP என்கிரிப்சன்  கடவுச் சொல் முறையை அமைக்க வேண்டாம். இதனை ஹேக் செய்வது மிக மிக எளிமையாகும்.


2. கட்டாயம் WPA2 வை பயன்படுத்துங்கள், வலிமையான கடவுச் சொல்லை அமைத்திடுங்கள். அந்த கடவுச் சொல்லானது small letters, capital letters, symbols and numbers ஆகியவைகளை கொண்டிருந்தால் ஹேக் செய்யவது மிக கடினமாகும். எளிமையான கடவுச் சொல் இருந்தால் ஹேக் செய்ய எளிமையாகும்.


பலவீனமான கடவுச் சொல் என்பது: 987654321 இது போன்ற வெறும் கைபேசி எண்களும், நமது பெயர்களை கடவுச் சொல்லாக வைப்பதுமாகும்.

வலிமையாம கடவுச் சொல் என்பது:

[email protected]

19abdulla92

[email protected]

A9WJQ$h!?_

b=K&N8J24Y

இது போல இருக்க வேண்டும். இவ்வாறான கடவுச் சொல் இருக்கும் போது ஹேக்கர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.


3.WPS என்கிற உங்களது ரவுட்டரில் நிச்சயம் அனைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும். WPS எனேபிலில் இருந்தால் ஹேக்கர்களுக்கு நீங்களே வேலையை எளிதாக்கி கொடுப்பது போலவாகும்.


Paragraph

முகப்பு 

© 2018 cyber_kavalan. All right Reserved - Powered by haja