உங்களுக்கு எபிக் பிரவுசர் தெரியுமா ?
பதிவிட்ட தேதி: 2018-06-19/ Epic Browser

இணைய தளம் பயன் படுத்தும் நமக்கு கூகுள் குரோம், மொஸில்லா, தவிர வேறு சிலுவையும் தெரிந்து இருக்கலாம், ஆனால் இணைய வேகத்தை கவனத்தில் கொள்ளும் நாம் நமது பிரைவசி பற்றி கவலை கொள்வதில்லை. பல பிரபலமான பிரவுசர்கள் பிரைவசி பாதுகாப்பு கொண்டிந்தாலும் அவை போது மானவை அல்ல.
எபிக் பிரவுசர் முழுக்க முழுக்க பயனாளர் பாதுகாப்பிற்காக உருவாக்கப் பட்டது ஆகும். மட்டுமல்லாது இந்த பிரவுசர் தன்னுள்ளே வி.பி.என் ஆப்சனையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்க இணையத்தில் உலவுவதை யாரும் நோட்டமிட முடியாது என்கிறது எபிக் பிரவுசர் குழு.
எபிக் பிரவுசரால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:
1. விளம்பரங்கள் இடம்பெறாது.
நாம் சில இணையதளம் சென்றால் அங்கு இடம் பெரும் விளம்பரங்கள் நம்மை ஒரு வழி செய்துவிடும், மட்டுமல்லாது சில விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கும். இவாறான அணைத்து விளம்பரங்களையும் இந்த பிரவுசர் தடை செய்து நமக்கு காட்டாது.
2. வெப்சைட் டிராக்கிங்
நாம் எந்த இணைய தளம் சென்றாலும் நம்மை பற்றிய அடிப்படை தகவல்களை நாம் செல்லும் அந்த குறிப்பிட்ட இணையதளம் பதிந்து வைத்துக் கொள்ளும். அந்த பதிவில் நம்முடைய இடம், நாம் பயன் படுத்தும் இயங்குதளம், பிரவுசர், நாம் எப்படி அந்த குறிப்பிட்ட இணைய தளத்தை அடைந்தோம், நம்முடைய கைபேசியின் திரை அளவு என்ன, நம்முடைய ஐ.பி அட்ரஸ் மற்றும் இன்னும் பல நுணுக்கமான தகவல்களை அந்த தளம் பதிவு செய்யும் இதற்கும் ட்ரெக்கிங் என்பார்கள்.
இது போன்ற டிராக்கிங் செய்யும் தொல்லையிலுருந்து எபிக் நம்மை பாதுகாக்கிறது.
3. கீழ் காணும் எவற்றையும் எபிக் பிரவுசர் சேமிக்காது:
No History.
No Web Cache.
No DNS Pre-Fetching.
No DNS Cache.
No Third Party Cookies.
No Rogue Extensions.
No Spell-Check.
No Autofill.
No Password Saving.
No Google Sync..
No Automated “Most Visited Websites”.
No Auto-Suggest.
No Alternate Error Pages.
4. இந்த பிரவுசர் முழுக்க முழுக்க பிரைவேட் பிரவுசிங் மோட் ஆகும்.
5.ஒரு முறை இந்த பிரவுசரை திறந்து ஏதாவது தளம் சென்று பிறகு மூடி விட்டால். மறுபடியும் திறக்கும் போது. நீங்கள் முன்னாள் சென்று வந்த தடமே இருக்காது . நீங்கள் பயனாளர் பெயர், கடவு சொல் பயன் படுத்தி இருந்தால் அதுவும் இருக்காது. இது ஹேக்கர்களுக்கு சவுக்கடியாகும்.
5. எபிக் பிரவுசர் விண்டோஸ், மற்றும் மேக் இயங்கு தளத்திற்கு கிடைக்கும்.
6. இது முற்றிலும் இலவசமாகும்.
எபிக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. ஆனால் இதனை நிறுவியவர் அலோக் பரத்வாஜ் என்னும் இந்தியர் ஆவார்.
முழு பாதுகாப்புடன் இணையத்தில் உலவ எபிக் பிரவுசர் பயன் படுத்தவும்.
மேலும் எபிக் பிரவுசர் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் பதிவிறக்கம் செய்ய:
epic browser, privacy, safety, ad blocker, epic, free, free browser
Paragraph